• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இணைய காலத்தில் நுழையும் திபெத் வணிகம்
  2016-11-29 09:56:51  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத் ஜின் சியூ வணிக பொருட்கள் விற்பனை மையம் 28ஆம் நாள் லாசாவில் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் இயங்கத் தொடங்கியது. உயர் செயற்திறனுடைய வர்த்தக மேடை, வசதியான தளவாடங்கள் வழித்தடம், சேவைக்கான பன்முக ஆதரவு அமைப்பு முறை ஆகியவற்றுடன், திபெத்தின் பெருமளவு வணிகப் பொருட்களின் விற்பனை இணைய காலத்தில் நுழைய இம்மையம் துணைபுரியும்.

ஜின் சியூ வணிக பொருட்கள் விற்பனை மையம், திபெத் தன்னாட்சி பிரதேச அரசின் அங்கீகாரம் மற்றும் ஆதரவைப் பெற்று நிறுவப்பட்ட பன்னோக்க சேவை மேடையாகும். திபெத்தின் தனிச்சிறப்புமிக்க பொருட்கள் மற்றும் பண்பாட்டைச் சார்ந்து, பெருமளவு வணிகப் பொருட்களின் விற்பனை, இணைய கடை, நவீன சரக்கு போக்குவரத்து, இயல்பான சோதனை கடை ஆகியவை இணையும் புதிய மாதிரியில் இயங்கி வரும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040