• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
"சீனாவுடன் Selfie!" என்னும் போட்டி
  2016-12-12 14:48:44  cri எழுத்தின் அளவு:  A A A   

நணபர்களே!சீன வானொலி தமிழ் பிரிவு உங்களுக்காக selfie பற்றிய ஒரு போட்டியை நடத்துகிறது.

உங்களில் யார் இந்த புகைப்பட போட்டியில் கலந்து கொள்கிறீர்கள்?

இந்த போட்டியில் கலந்து கொள்ள நீங்கள் சீனாவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கிருந்தும் பங்கேற்கலாம். நீண்டகாலமாக நீங்கள் சீனாவில் இருக்கலாம் அல்லது சீனாவைப் பற்றிய கதைகளை தெரிந்து வைத்திருக்கலாம். அதே போல் சீனா குறித்து நீண்டகாலமாக உங்களுக்குள் இருக்கும் உணர்வுகளை எங்களுடன் வெளிப்படுத்துங்கள். இதன் மூலம் சிறந்த பரிசுகளை நீங்கள் பெறலாம்.

போட்டி நாள்:

உங்களது selfie எங்களுக்கு டிசம்பர் 12 முதல் 23ஆம் நாளுக்குள் கிடைக்கும்படி இனுப்புங்கள்.

எப்படி அனுப்புவது:

1.மின்னஞசல் வழிதொடர்புக்கு—— tamil@cri.com.cn

2.முகநூல் தகவல் வழி தொடர்புக்கு

போட்டியின் விதிமுறைகள்:

நீங்கள் சீனாவின் மாளிகை, கோடைகால அரண்மனை உள்ளிட்ட சீனக் காட்சியிடங்களுடன் புகைப்படங்களை எடுக்கலாம். நீங்கள் பாண்டா பொம்மை, சீனப் பட்டு, கூடவே சாப்பிடும் குச்சி உள்ளிட்ட சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த பொருட்களுடன் புகைப்படங்களை எடுக்கலாம். அல்லது, நீங்கள் சீன நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்து எங்களுக்கு அனுப்பிடுங்கள்.

புகைப்படத் தரம் குறைந்தது 100K இருக்கப்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

புகைப்படங்கள் selfie இருக்க வேண்டும்.

உங்களது புகைப்படங்கள் எங்களது முகநூல் மற்றும் சீன வானொலி இணையதளத்தில் வெளியிடப்படும். இதில் சிறந்த 20 புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளை வழங்கப்படும்.

மேலும், இந்தப் போட்டி குறித்த அனைத்தும் முடிவுகளும் சீன வானொலி தமிழ் பிரிவு விதிமுறைகளுக்கு உட்பட்டது.

உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து, இப்போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொள்ளுங்கள்!

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040