• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தான் மின்னணு வணிக அலுவலில் பங்கு ஆற்றும் அலிபாபா
  2017-01-20 10:41:24  cri எழுத்தின் அளவு:  A A A   
2017ஆம் ஆண்டு குளிர்கால டாவோஸ் மன்றத்தின் கூட்டம் ஜனவரி 17 முதல் 20ஆம் நாள் வரை, ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்றது. 19ஆம் நாள் அலிபாபா குழுமத்தின் தலைமை இயக்குநர் மாயூன், டாவோஸ் ஆண்டு கூட்டத்தில் பாகிஸ்தான் தலைமையமைச்சருடன், மின்னணு வணிக அலுவல், தாராள வர்த்தகம், தொடரவல்ல வளர்ச்சி முதலியவை குறித்து, விவாதித்தார்.

மாயூன் பேசுகையில், அலிபாபா, பாகிஸ்தானுடன் மின்னணு வணிக அலுவல் மற்றும் இணைய நாணயத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும். இதன் மூலம், பாகிஸ்தானின் உற்பத்திப் பொருட்கள் சீனாவில் விற்பனை செய்யப்படலாம். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்துடன், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையில் முழுநாள் சரக்குப் போக்குவரத்து மண்டலத்தை உருவாக்கப் பாடுபடுவோம் என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040