• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகிற்குச் சீன இளைஞர்களின் குரல்
  2017-02-01 14:45:25  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐ.நா பொருளாதாரம் மற்றும் சமூகக் கவுன்சிலின் 6ஆவது இளைஞர்கள் மன்றக் கூட்டம் ஜனவரி 30ஆம் நாள் நியூயார்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் துவங்கியது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 இளைஞர் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு தொடரவல்ல வளர்ச்சி இலக்கை நனவாக்குவது பற்றி விவாதித்தனர். டிஎப் போய்ஸ் எனும் சீனாவில் புகழ்பெற்ற பாடகர் குழுவின் உறுப்பினர் வாங் யுவான், சீன ரென்மின் பல்கலைக்கழகத்தின் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த இரு மாணவர்கள் ஆகியோர் சீன இளைஞர்களின் பிரதிநிதிகளாக இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

வறுமை ஒழிப்பு, இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார உரிமை, பாலின சமத்துவம், சுகாதாரமும் நல வாழ்வும், காலநிலை மாற்றம் முதலியவை பற்றி இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டன. சீனாவைச் சேர்ந்த இளம் பாடகர் வாங் யுவான் தரமான கல்வியில் கவனம் செலுத்துகின்றார். அவர் கூறியதாவது

நான் தற்போது மேனிலை பள்ளியில் பயின்று வருகின்றேன். சீனாவில் கல்வித் துறையில் நிலவிய ஒரு முக்கிய பிரச்சனையாவது, தொலைதூர மற்றும் வறிய பிரதேசங்களில் பல குழந்தைகள் தரமான கல்வி வசதியை இன்னும் பெற முடியாது. சொந்த முயற்சி மூலம் மேலதிக குழந்தைகளுக்குக் கல்வி வசதிகளை வழங்க வேண்டும் என்றும், தரமான கல்வியில் மேலதிக மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விரும்புகின்றேன் என்றார் அவர்.

எண்ணற்ற பதின்ம குழந்தைகளின் முன் உதாரணமாக இருக்கும் அவர், தனது செல்வாக்கை முழுமையாக வெளிப்படுத்தி, தரமான கல்வியின் முக்கியத்துவத்தை பிரச்சாரம் செய்து, மேலதிக மக்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று அவர் தனது உரையில் விருப்பம் தெரிவித்தார்.

செங் போசுங், 10ஆவது வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவராவார். 2015ஆம் ஆண்டு அவர் சீனாவின் குழந்தை தூதர் என்ற பெயரில், ஐ.நாவின் தொடரவல்ல வளர்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். கல்வி பெறுவது வறுமையை ஒழிப்பதற்கான மிக முக்கிய வழிமுறையாகும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

11ஆவது வகுப்பைச் சேர்ந்த மாணவி சுன் காய்ரு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி உரை நிகழ்த்தினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டப் பிறகு, உலகளாவிய இந்தப் பிரச்சினை பற்றி நான் மேலும் நன்றாக அறிந்து கொண்டு வருகின்றேன். உலகில் பல பிரச்சினைகள் எங்களது வாழ்க்கையுடன் தொடர்புடையன. இளைஞர்களான நாங்கள் இவற்றைத் தீர்ப்பது பற்றி யோசித்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். நடப்புக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் தத்தம் நாடுகளில் தோன்றிய பிரச்சினைகளை விவரித்து, அவற்றைத் தீர்ப்பது பற்றி கூட்டாக விவாதித்தனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• சீனாவின் 2ஆவது விமானங் தாங்கி
• வாங்யீ ஜெர்மனி தலைமையமைச்சருடன் சந்திப்பு
• ஈரான் அணு பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கை பற்றிய கூட்டம்
• பட்டுப்பாதை பொருளாதார மண்டல ஒத்துழைப்பு வளர்ச்சி கருத்தரங்கு
• வட கொரிய அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய 3 நாடுகளின் கலந்தாய்வு
• சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
• வட கொரியா மீது புதிய தடை நடவடிக்கை மேற்கொள்வது அமெரிக்காவின் நிலைப்பாடு
• ஆப்கானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல்
• நக்ஸல் தாக்குதலில் 24 இந்தியக் காவல்துறையினர் பலி
• பழமையான நாகரிகக் கருத்தரங்கில் எட்டப்பட்ட பொதுக் கருத்துக்கள்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040