• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாட்டு மூலதனத்தை சீனா ஈர்க்கும் நிலை குறித்த ஐ.நாவின் அறிக்கை
  2017-02-02 16:10:23  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜெனீவாவிலுள்ள ஐ.நா வர்த்தக மற்றும் வளர்ச்சி கலந்தாய்வு பிப்ரவரி முதல் நாள் அறிக்கை வெளியிட்டது. 2016ஆம் நாள் உலகில் குறிப்பாக ஆசிய பிரதேசத்தில் அன்னிய நேரடி முதலீட்டு மதிப்பு பெரிதும் வீழ்ச்சியடைந்த நிலையில், சீனா ஈர்த்துள்ள வெளிநாட்டு மூலதனம் 13900 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது, 2015ஆம் ஆண்டில் இருந்ததை விட, 2.3 விழுக்காடு அதிகம். அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் சீனா உலகில் 3ஆவது இடத்தில் உள்ளது என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரிட்டன் ஈர்த்துள்ள அன்னிய முதலீடு 17900 கோடி அமெரிக்க டாலராகும். அந்நாடு, 2015இல் 12ஆவது இடத்திலிருந்து 2016இல் 2ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது என்று இவ்வறிக்கையில் காட்டப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு, சீனா ஈர்த்துள்ள வெளிநாட்டு மூலதனத்தின் மதிப்பு வரலாற்றில் மிக அதிகமாக இருப்பதுடன், அன்னிய முதலீட்டுக் கட்டமைப்பையும் தொடர்ந்து மேம்படுத்தியுள்ளது. தரமும் உயர்ந்துள்ளது. அன்னிய முதலீடு, உழைப்பு ரக தொழிற்துறையிலிருந்து, மூலதன மற்றும் தொழில்நுட்ப ரக தொழிற்துறைக்கு தொடர்ந்து நகர்ந்துள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040