• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வானம் மற்றும் கடலின் விளிம்புக்கு வா!
  2017-02-09 16:02:45  cri எழுத்தின் அளவு:  A A A   

நண்பர்களே,  இன்று, ஹைனான் தீவின் மிக தெற்கிலுள்ள ஷையா நகர் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். சீனாவில் மிக சிறந்த காற்று தரமுடைய நகர் ஷையா ஆகும். அதுமட்டுமல்ல, இந்நகரில் வாழும் மக்களின் சராசரி ஆயுட்காலம் 80 வயதாகும். சீன அளவில் இது அதிகம்.

ஷையா நகரின் வடக்கில் மலைகள் கம்பீரமாக காட்சியளிக்கும். தெற்கில் பரந்து பட்ட கடல் காண்போரை ஈர்க்கும். சிறிய மற்றும் பெரிய அளவில் 19 துறைமுகங்கள் நகரில் உள்ளன. 40 சிறிய மற்றும் பெரிய தீவுகளும் உள்ளன. மேலும், ஷையா நகர் 20லட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய தென் சீனக் கடலைக் கொண்டுள்ளது.

ஷையா நகர், தென் ஹைனான் மாநிலத்தின் மையமாக விளங்குகிறது. இந்நகர் நீண்ட வரலாறுடையது. முதலில் உங்களுக்கு அறிமுகப்படுத்துவது, தியேன் யா ஹைய் ஜியோ காட்சித்தலம். இக்காட்சித்தலத்தின் பெயர், அருமையான பொருளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. வானம் மற்றும் கடலின் விளிம்பு என்பது அதன் பொருளாகும். அது பற்றி ஒரு சோகமான கதை உள்ளது. இக்காட்சித்தலத்தில், தியேன் யா மற்றும் ஹைய் ஜியோ ஆகிய இரண்டு பெரும் கற்கள் உள்ளன. இவை, ஒரு காதல் ஜோடியின் அவதாரமாக கருதப்படுகின்றன. இந்தக் காதலர்கள் இரண்டு குடிமரபுப் பகைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஆழமாகக் காதலித்தனர். இருப்பினும், இருவரது குடும்பத்தினரும் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இணைபிரியாத ஜோடியாக இருந்த இவர்கள், வேறு வழியின்றி கடலில் குதித்தி தற்கொலை செய்து கொண்டனர். பின், இரண்டு கற்களாக மாறினர். அதனாலே, இக்காட்சித்தலத்தில் இந்த இரண்டு பெரும் கற்கள் ஒன்றை ஒன்று எதிர்நோக்கி உள்ளன.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• திபெத் மொழி தேடுபொறியின் முதலாவது ஆண்டு நிறைவு
• செல்லிடப்பேசி மூலம் பணம் செலுத்துவதில் சீனா முதலிடம்
• வட கொரியாவின் செயலுக்கு அமெரிக்கா வரவேற்பு
• சிரியாவில் பன்னாட்டு ஒன்றியத்தின் தாக்குதலில் அப்பாவி மக்களின் உயிரிழப்பு
• ஆப்கானில் அமெரிக்காவின் புதிய கொள்கைக்கு எதிரொலிப்பு
• ஈராக் ஒருமைப்பாட்டுக்கு அமெரிக்கா ஆதரவு
• குட்ரேஸ்:ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய பன்முக உடன்படிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்
• டோங்லாங் பிரச்சினை பற்றி இருநாடுகளின் கருத்துக்கள்
• அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் ஈராக் பயணம்
• ரஷியா: சிரியா அரசுப் படை அலிபோவை மீட்டுள்ளது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040