• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வர்த்தக வளர்ச்சி குறைவுக்குக் காரணம்:கொள்கையின் உறுதியற்ற தன்மை
  2017-02-22 09:47:44  cri எழுத்தின் அளவு:  A A A   
2016ஆம் ஆண்டு உலக வர்த்தகத்தின் வளர்ச்சி வேகம், நிதி நெருக்கடிக்குப் பின் காணப்பட்ட மிகத் தாழ்ந்த நிலையில் உள்ளது என்றும், கொள்கையின் உறுதியற்ற தன்மை பெருமளவில் இந்த வளர்ச்சியைப் பாதித்துள்ளது என்றும் உலக வங்கி 21ஆம் நாள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கொள்கைகளின் உறுதியற்ற தன்மை அதிகரித்ததால், தொழில் நிறுவனங்கள் முதலீடு மற்றும் ஏற்றுமதி திட்டத்தை ஒத்திப் போட வாய்ப்புள்ளது. நுகர்வோர்களும் நுகர்வுக்கான செலவைக் குறைத்துள்ளனர். இதன் விளைவாக கடந்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் குறைந்த அதேவேளை, உலக வர்த்தக வளர்ச்சியும் பாதிப்படைந்தது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040