• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உற்பத்தித் துறையில் தொழிலாளர்களின் ஊதியம் உயர்வு
  2017-02-27 14:48:30  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளை விட, சீனாவின் உற்பத்தி துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் சராசரி ஊதியம் அதிகம். 10 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வந்த பிறகு, தற்போதைய சராசரி ஊதியம், கிரேக்கம், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளின் நிலையை விரைவாக எட்டி வருகிறது என்று ஆய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், சீனாவில் மணிக்கு சராசரி ஊதியம், யூரோ நாணய பகுதியின் உறுப்பு நாடுகளின் வேலை ஊதியத்தின் 70விழுக்காட்டு அளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில சீனா முன்னேற்றம் பெற்றுள்ளதை இந்த புள்ளிவிபரங்கள் காட்டுவதாக, ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040