• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய அடிப்படை வசதிக் கட்டுமானத்தில் 170000 கோடி அமெரிக்க டாலர் தேவை
  2017-03-01 09:20:01  cri எழுத்தின் அளவு:  A A A   
2016 முதல் 2030ஆம் ஆண்டு வரை, ஆசியாவில் அடிப்படை வசதிக் கட்டுமான முதலீட்டுத் தேவை, 26 இலட்சம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டும். ஆண்டுக்கு சராசரியாக 1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் வேண்டும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி 28ஆம் நாள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆசிய அடிப்படை வசதிக் கட்டுமானத்தின் தேவையை நிறைவு செய்வது என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, இப்பிரதேசத்தின் எரியாற்றல், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, நீர்வளம், சுகாதாரம் முதலியவற்றின் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தில் கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த பல பத்து ஆண்டுகளாக, இந்த அறிக்கையில் தொடர்பான 45 நாடுகளின் அடிப்படை வசதிக் கட்டுமானம், வெகுவிரைவாக வளர்ந்து வருகிறது. ஆனால், இதில் இன்னும் பற்றாக்குறைகள் உள்ளன. 40 கோடி மக்கள், மின்சார வினியோகத்தைப் பெறவில்லை. 30 கோடி மக்கள், தூய்மையான தண்ணீரைக் குடிக்கவில்லை. சுமார் 150 கோடி மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040