• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டியின் கூட்டத்தொடர் துவங்கியது
  2017-03-03 17:47:26  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு, நாட்டின் அரசியல் கலந்தாய்வு, ஜனநாயகக் கண்காணிப்பு, அரசு விவகாரங்களை விவாதித்து அதில் பங்கு கொள்வது ஆகிய துறைகளில் முக்கியப் பங்காற்றி வருகின்றது.

மார்ச் திங்கள் 3ஆம் நாள் பிற்பகல் 3 மணியளவில், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் கூட்டத்தொடர் துவங்கியது. ஷீ ச்சின்பிங் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் முக்கியத் தலைவர்கள் இக்கூட்டத்தொடரின் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டித் தலைவர் யூ ச்சங் சேங் பணியறிக்கையை வழங்கினார். அடுத்த பத்து நாட்களுக்குள், சீனாவின் பல்வேறு கட்சிகள் மற்றும் குழுக்கள், பல்வேறு தேசிய இனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டியின் சுமார் 2100 உறுப்பினர்கள், சீனச் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி பற்றிய முக்கிய கோட்பாடு மற்றும் கொள்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்குவர்.

இவ்வாண்டு சீனா, 13ஆவது ஐந்தாண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முக்கியமான ஆண்டாகும். விநியோக முறைச் சீர்திருத்தத்தை ஆழமாக முன்னேற்றுவதற்கான ஆண்டுமாகும். இவ்வாண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு நடைபெறும். துவக்க விழாவில் யூ ச்சங் சேங் பணியறிக்கைய வழங்கிய போது, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டி, 13ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் நடைமுறையாக்கம் தொடர்பாக ஆலோசனைகளை வழங்குவதை பணியின் முக்கிய நெறியாகக் கொண்டு, பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியை விரைவுபடுத்துவது தொடர்பாக அரசு விவகாரங்களை விவாதித்து அதில் பங்கு கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டுக்கான முக்கிய பணிகள் குறித்து அவர் பேசுகையில், ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20ஆம் ஆண்டு நிறைவு தொடர்பாக சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு நடவடிக்கை மேற்கொண்டு, ஹாங்காங், மக்கெள மற்றும் தைவானின் பல்வேறு துறையினரின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஜனநாயகக் கண்காணிப்பு, சீனாவின் சோஷலிச கண்காணிப்பு முறைமையில் உள்ள முக்கிய பகுதியாகும். இது சோஷலிச கலந்தாய்வு ஜனநாயகத்தை நனவாக்கும் முக்கிய முறையுமாகும். ஆலோசனைகளையும், கொள்கை தீர்மானத்தையும் செயல்படுத்துவதில் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஜனநாயகக் கண்காணிப்பு மேலதிக கவனம் செலுத்துகிறது என்று இப்பணியறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விதிகளைப் பின்பற்றி, ஜனநாயகக் கண்காணிப்பு மேற்கொள்வதில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஊன்றி நிற்பது முக்கியமானது. அதே வேளையில், உண்மை கருத்துக்களைத் தெரிவிப்பதற்கும் ஊக்கமளிக்க வேண்டும் என்றும் இப்பணியறிக்கையில் யூ ச்சங் சேங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040