• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் கொரியா சென்றடைந்த தாட் முறைமைக்கான சாதனங்கள்
  2017-03-07 14:23:43  cri எழுத்தின் அளவு:  A A A   
தாட் முறைமையை அமைப்பதற்குரிய சாதனங்கள் தென் கொரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தென் கொரியாவுக்கான அமெரிக்க ராணுவத் தலைமையகம் 7ஆம் நாள் தெரிவித்துள்ளது.

தாட் முறைமையை அமைப்பது பற்றிய அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக் கிடையேயான தீர்மானத்தை அமெரிக்கா தொடர்ந்து நடைமுறைப்படுத்தி, அதன் இயக்கத்தைக் கூடிய விரைவில் துவக்கும் என்று அமெரிக்க ராணுவத் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் மே முதல் ஜூலை வரைக்குள் தாட் முறைமையை அமைப்பதை தென் கொரிய ராணுவத் தரப்பு நிறைவேற்ற உள்ளதாக அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040