• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கைதான 2 இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா முடிவு
  2017-03-10 18:36:13  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உல்ள காஷ்மீர் பிரதேசத்தில் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்ட 2 பாகிஸ்தான் இளைஞர்களை, அந்நாட்டுக்கே திருப்பி அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.

அவான், குர்ஷீத் ஆகிய இருவரும், காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு இவர்களிடத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், அவர்களிடத்திலான விசாரணை நிறைவடைந்ததாகவும், வெள்ளிக்கிழமை பாகிஸ்தானுக்கு அவர்கள் அனுப்பப்படுவர் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நபீஸ் சகாரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், அட்டாரி வாகா எல்லை வழியாக இளைஞர்கள் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை பொருத்தவரை, விசாரணையில் அவர்களுக்கு எதிராக எதுவும் கண்டுபிடிக்கவில்லை. இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்த 3 நாள்களுக்குப் பின், இவர்கள் இருவரும் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை தவறுதலாகக் கடந்த்து நினைவுகூரத்தக்கது. (பண்டரிநாதன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
• 3 இந்தியர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர்
• சீன-ஆஸ்திரேலிய ஒத்துழைப்பு பற்றிய லீ கெச்சியாங்கின் முக்கிய உரை
• ஜெனீவாவில் சிரிய பிரச்சினை பற்றிய புதிய அமைதி பேச்சுவார்த்தை
• சீன, ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
• லீ கெச்சியாங்கின் ஆறுதல் செய்தி
• வட கொரியா ஏவுகணை சோதனை தோல்வி
• சீன-அமெரிக்க உறவு பற்றி சீனாவின் கருத்து
• பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல்
• பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040