பல ஆண்டுகளாக காணாமல் போனதாகக் கருதப்படும் சந்திரயான்-1 எனும் இந்தியாவின் முதலாவது சந்திர ஆய்வு விண்கலத்தை கண்டுபிடித்துள்ளதாக, அமெரிக்காவின் நாசா நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது.
நாசா நிறுவனம் இந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஜுலை முதல் அக்டோபர் வரை, சந்திரனைச் சுற்றிச் செல்லும் விண்கலன் ஒன்றை ராடார் கருவி கண்டுபிடித்துள்ளது. ஆய்வு செய்த பிறகு, இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலன் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது, இந்த விண்கலன் தொடர்ந்து சந்திரனின் மேற்பரப்புக்கு 200 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலவை ஆய்வு செய்யும் வகையில் சந்திரயான்-1 விண்கலம் 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் நாள் விண்வெளியில் ஏவப்பட்டது. திட்டப்படி, அது நிலவைச் சுற்றி 2 ஆண்டுகளாக பறந்து கொண்டி இருந்தது. ஆனால் 2009ஆம் ஆண்டு ஆகஸ்டு 29ஆம் நாள் தொடங்கி, சந்திரயான்-1 விண்கலம் தொடர்வை இழந்தது.