• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சுற்றுலாத் துறையை வளர்க்க இலங்கை புதிய திட்டம்
  2017-03-14 11:12:21  cri எழுத்தின் அளவு:  A A A   
இலங்கையை தலைசிறந்த சுற்றுலா இடமாக விளம்பரம் செய்யுமாறு ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னணி சுற்றுலா நிறுவனமான டியுஐ-க்கு கோரிக்கை விடுக்கப்பபட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சகம் கொழும்புவில் திங்கள்கிழமை தெரிவித்தது.

ஜெர்மனியைச் சேர்ந்த இந்த நிறுவனம், இலங்கையில் சுற்றுலா வளர்ச்சிக்கும், பயணிகளை வரவேற்பது தொடர்பான பயிற்சிகளை அளிப்பதற்கும் உதவியளிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆலோசனையில் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா மற்றும் டியுஐ நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சுற்றுலாத்துறையை விரிவாக்கும்போது, போரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை அளிக்குமாறும் இந்நிறுவனத்துக்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய பெருங்கடல் பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு சேவையாற்றுவதற்கு, இலங்கை, முக்கியப் புள்ளியாக விளங்கும் என்று டியுஐ மேலாண்மை இயக்குநர் கேர்ரி வில்சன் தெரிவித்துள்ளார். (பண்டரிநாதன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரிட்டனின் முதலாவது நிலைப்பாட்டு ஆவணம்
• ஈரான் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை பற்றிய ஈரானின் நிலைப்பாடு
• ரஷிய-இந்திய ராணுவப் பயிற்சி
• வாங் யீ-லாவ்ரோவ் தொலைபேசியில் பேச்சு
• சீனாவில் நடைபெற்ற ஜப்பானின் நிபந்தனையின்றி சரண நிறைவு நடவடிக்கைகள்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040