• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பணியாளர்களை விடுவிக்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை-  தெற்கு சூடான் அரசு எதிர்ப்பாளர்கள் விருப்பம்
  2017-03-15 09:51:52  cri எழுத்தின் அளவு:  A A A   
தெற்கு சூடானின் நைல் பகுதியில் கடத்தப்பட்ட 2 இந்திய பணியாளர்களை விடுவிப்பது தொடர்பாக, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அந்நாட்டின் அரசு எதிர்ப்புப்படை தெரிவித்துள்ளது. தெற்கு சூடான் மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் கர்னல் வில்லியம் கட்ஜியாத், சின்ஹுவா செய்தியாளரிடம் திங்கள்கிழமை கூறுகையில், எண்ணெய் பணியாளர்கள் கடத்தப்பட்டதை ஒப்புக் கொண்டார். மேலும், அவர்களை விடுவிப்பது தொடர்பாக, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இந்தியா, தனது நிலைப்பாட்டில் இருந்து கீழிறங்கி, எங்களது தலைமையகத்தில் பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தெற்கு சூடானின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மைக்கேல் மக்வெய் கூறுகையில், எதிர்ப்பாளர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை. கடத்தப்பட்ட பணியாளர்களை மீட்க அவர்கள், 10 லட்சம் அமெரிக்க டாலர் பணயத் தொகையாகக் கேட்கின்றனர். எங்கள் அரசு யாருக்கும் பணம் தராது. பணம் அளிப்பது தீவிரவாததைத்தான் ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.(பண்டரிநாதன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரிட்டனின் முதலாவது நிலைப்பாட்டு ஆவணம்
• ஈரான் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை பற்றிய ஈரானின் நிலைப்பாடு
• ரஷிய-இந்திய ராணுவப் பயிற்சி
• வாங் யீ-லாவ்ரோவ் தொலைபேசியில் பேச்சு
• சீனாவில் நடைபெற்ற ஜப்பானின் நிபந்தனையின்றி சரண நிறைவு நடவடிக்கைகள்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040