• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலங்கையில் போர் குற்ற விசாரணை – கலப்பு நீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை
  2017-03-16 11:26:18  cri எழுத்தின் அளவு:  A A A   
இலங்கையில் போர் குற்றம் விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணை அதிகாரிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மின்சாரம மற்றும் ஆற்றல் துறையின் துணை அமைச்சர் அஜித் பெரேரா கொழும்புவில் வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதைத் தெரிவித்தார். அவர் கூறும்போது, இலங்கை நீதித்துறை வலுவானது. எங்களது பிரச்னைகளை தீர்க்கும் ஆற்றல் எங்களிடமே உள்ளது. அரசுத் தலைவர், தலைமை அமைச்சர் ஆகியோர் போர் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிக்கோ அல்லது வழக்கறிஞருக்கோ அனுமதி இல்லை என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளனர் எனக் குறிப்பிட்டார்

போர் குற்றம் தொடர்பான விசாரணையில் கலப்பு நீதிமன்றத்தை இலங்கை அமைக்க வேண்டும் என்று ஐ.நா கூறிய ஒரு வாரத்துக்குப் பிறகு, இலங்கை அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது. (பண்டரிநாதன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அயர்லாந்தில் திபெத் பிரிதநிதிக்குழுவின் பயணம்
• சிரியாவில் மோதல் குறைப்பு பிரதேசத்தில் அனுப்பப்பட்ட முதலாவது மீட்புப் பொருட்கள்
• ரஷியா, ஈரான், வட கொரியா மீது அமெரிக்காவின் புதிய தடை நடவடிக்கை
• சீனாவில் செவ்வாய் கிரக கிராமத் திட்டம்
• ஓட்டுநரில்லா வாகனங்களை அனுமதிக்க மாட்டோம்:நிதின் காட்காரி
• மும்பை நகரில் அடுக்கு வீடு இடிந்து விழுந்த விபத்து
• தாராள வர்த்தகம் குறித்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் பிரிட்டனின் கலந்தாய்வு
• டோக்லமில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் – இந்திய நிபுணர்
• எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு
• இந்தியாவில் ஹெச்1என்1 வைரஸ் பரவல் 600 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040