• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
"தாட்" ஏவுகணை எதிர்ப்பு முறையை நிறுவுவது உடனடியாக நிறுத்த சீனா வேண்டுகோள்
  2017-03-17 19:39:19  cri எழுத்தின் அளவு:  A A A   

வடகொரியாவில் இருந்து ஏற்படும் அணுஆயுத ஏவுகணை அச்சுறுத்தலைத் தடுக்கும் வகையில் மட்டுமே, தாட் எனும் ஏவுகணை எதிர்ப்பு முறையை நிறுவுவதாக, தென்கொரியா கூறியுள்ளது. ஆனால், இந்த கூற்றை சீனா ஏற்றுக்கொள்ளாது. இது குறித்து சீன வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யீங் 17ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் பேசியதாவது

தாட் ஏவுகணை எதிர்ப்பு முறையில் இயங்கும் 'எக்ஸ் அலை' ராடார் கருவி மூலம் 2000 கி.மீ.க்கும் தொலைவிலுள்ள இலக்கினைக் கண்டறியலாம். இந்த முன்னெச்சரிக்கைக்குரிய பரப்பளவானது, கொரிய தீபகற்ப எல்லையைத் தாண்டும். சீனாவின் ஆட்சி நிலப்பகுதி உள்ளிட்ட ஆசிய கண்டத்தின் உள்பகுதிகளும் கண்காணிக்கப்படும். தென்கொரியா அணுஆயுத ஏவுகணையை தடுப்பதற்கான பரப்பளவை இந்த ஆயுத முறை அதிக அளவில் தாண்டும். தங்களது பாதுகாப்புக்காக தேவையான நடவடிக்கைகளை தென்கொரியா மேற்கொள்வதற்கு எதிர்ப்பு இல்லை. ஆனால், இந்த நடவடிக்கை, அண்டை நாடான சீனாவின் பாதுகாப்பு நலனைப் பாதிக்கும் அடிப்படையில் மேற்கொள்ளக் கூடாது என்றார்.

தாட் முறையை சீனா எதிர்க்கும் ஆதாரம் போதுமானதாகவும் நியாயமானதாகவும் உள்ளது. பிரச்சினையின் சாராம்சத்தையும் சீனாவின் கவனத்தையும் தொடர்புடைய தரப்புகள் சரியாக கவனித்து தாட் முறையை நிறுவும் போக்கினை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஹுவா சுன்யீங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே துப்பாக்கிச் சண்டை
• வங்காளதேசத்தில் நிலக்கரி மின்சார நிலையங்களின் கட்டுமானம்
• ஸ்காட்லாந்தில் சீன மேற்குப் பகுதி பண்பாட்டின் பரப்புரை
• சிரியா பிரச்சினைக்கு தீர்வு பற்றி சீனாவின் கருத்து
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை தொடர்பான கருத்துரு
• ஈராக் இராணுவத்தின் வான் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் சாவு
• அமெரிக்கா:ஐ.எஸ் அதியுயர் தலைவர் இன்னும் உயிர்
• பாகிஸ்தான்:காஷ்மீர் பகுதியில் இந்தியப் படை தாக்குதல் நடத்துதல்
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040