• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க உறவு பற்றி சீன வெளியுறவு அமைச்சரின் கருத்து
  2017-03-19 13:47:33  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 18ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரேக்ஸ் திலேர்சனைச் சந்தித்துரையாடினார். இதற்கு பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வாங் யீ பேசுகையில், இரு தரப்பின் கூட்டு முயற்சியுடன், இரு நாட்டுறவு ஆக்கப்பூர்வமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்று தெரிவித்தார். கடந்த திங்கள் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியது, இரு நாட்டுத் தலைவர்களின் பரிமாற்றம் மற்றும் இரு நாட்டுறவின் வளர்ச்சிக்குரிய அடுத்த காலக் கட்டத்திற்கு அடிப்படையிட்டுள்ளது என்றும் வாங் யீ தெரிவித்தார்.

கொரியத் தீபகற்ப அணு ஆற்றல் பிரச்சினை, ஆப்கான், சிரியா உள்ளிட்ட பிரதேசப் பிரச்சினைகளில் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி, தொடர்புடைய பிரச்சினைகளின் தீர்வுப் போக்கினை முன்னேற்ற இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. ஐ.நா, 20 நாடுகள் குழு, ஆசிய-பசிபிக் பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பலதரப்பு அமைப்பு முறையின் கீழ் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை நிலைநிறுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக வாங் யீ தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• சீன-ஐரோப்பிய பயணியர் விமான சேவை ஒத்துழைப்பு
• பெருமளவில் விநியோகிக்கப்படும் பொருட்களின் விலை உயர்வு
• கடும் காற்று மாசுப்பாட்டிற்கான காரணத்தைச் சமாளிக்கும் சீன அரசவையின் ஏற்பாடு
• அமெரிக்காவின் வரி வசூலிப்பு சீர்திருத்தம்
• ஜி20 அமைப்பின் ஹம்பெர்க் உச்சி மாநாடு பற்றி வாங் யீ கருத்து
• இந்தியாவில் கூட்டு ஆய்வுக்கான பணிக்குழுக் கூட்டம்
• அபு தாபி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் ஷிச்சின்பீங்கின் புத்தகத்தின் அறிமுக விழா
• அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் மிக முக்கிய 6 துறைகள்
• இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டம்
• சீனாவின் 2ஆவது விமானங் தாங்கி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040