• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யாங் சியே ச்சி-திலேர்சன் சந்திப்பு
  2017-03-19 13:48:11  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசவை உறுப்பினர் யாங் சியே ச்சி 18ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரேக்ஸ் திலேர்சனைச் சந்தித்துரையாடினார்.

சீன-அமெரிக்க உறவின் நீண்டகால, சீரான வளர்ச்சியையும், இரு நாட்டு ஒத்துழைப்பையும் நிலைநிறுத்துவது, இரு தரப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் பொது நலன்களுக்குப் பொருந்தியதாக அமைந்துள்ளது என்று யாங் சியே ச்சி தெரிவித்தார். கடந்த திங்கள், சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் அமெரிக்க அரசுத் தலைவர் டோனல்ட் டிரம்ப் ஆகிய இருவரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, புதிய காலக் கட்டத்தில் சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சியை முன்னேற்றுவது குறித்து முக்கிய பொது கருத்துக்களுக்கு வந்தனர். முக்கிய துறைகளிலான தொடர்பு மற்றும் பேச்சுவார்த்தையை இரு தரப்பும் வலுப்படுத்தி, தூதாண்மை, பொருளாதாரம், வர்த்தகம், ராணுவம், சட்ட அமலாக்கம், இணையம், மானிடப் பண்பாட்டியல் உள்ளிட்ட துறைகளிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை விரிவாக்க வேண்டும். நுணுக்கமான பிரச்சினைகளை உரிய முறையில் தீர்க்க வேண்டும். முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகளில் தொடர்பு மற்றும் கலந்தாய்வை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று யாங் ஜியே ச்சி தெரிவித்தார்.

அமெரிக்க-சீன உறவு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்க-சீன ஒத்துழைப்பு, ஒன்றுக்கொன்றான வளர்ச்சியை விரைவுபடுத்தி, பிரதேச நிதானம் மற்றும் உலக அமைதிக்காக முக்கிய பங்காற்றியுள்ளது என்று திலேர்சன் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• சீனாவின் 2ஆவது விமானங் தாங்கி
• வாங்யீ ஜெர்மனி தலைமையமைச்சருடன் சந்திப்பு
• ஈரான் அணு பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கை பற்றிய கூட்டம்
• பட்டுப்பாதை பொருளாதார மண்டல ஒத்துழைப்பு வளர்ச்சி கருத்தரங்கு
• வட கொரிய அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய 3 நாடுகளின் கலந்தாய்வு
• சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
• வட கொரியா மீது புதிய தடை நடவடிக்கை மேற்கொள்வது அமெரிக்காவின் நிலைப்பாடு
• ஆப்கானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல்
• நக்ஸல் தாக்குதலில் 24 இந்தியக் காவல்துறையினர் பலி
• பழமையான நாகரிகக் கருத்தரங்கில் எட்டப்பட்ட பொதுக் கருத்துக்கள்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040