• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவர் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
  2017-03-19 15:37:00  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 19-ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரிஸ் டில்லர்சனைச் சந்தித்துரையாடினார்.

தற்போது, சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சி முக்கிய வாய்ப்பை எதிர்நோக்குகின்றது. அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் சீரான தொடர்பை நிலைநிறுத்தி வருகின்றேன் என்று ஷிச்சின்பீங் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாட்டு அரசுத்தலைவர்கள் எட்டியுள்ள பொதுக் கருத்துக்கள் மற்றும் எழுச்சிக்கு இணங்க, சீனா மற்றும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் நிலை உள்ளிட்ட பல்வேறு நிலைகளுக்கிடையேயான பரிமாற்றத்தை அதிகரிப்பதோடு, இரு தரப்பு, பிரதேசம், உலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை விரிவாக்க வேண்டும் என்றும், உரிய முறையில் உணர்வலை தன்மையுடைய பிரச்சினைகளைக் கையாண்டு, இரு நாட்டு உறவு புதிய துவக்கப் புள்ளியிலிருந்து சீராகவும் நிதானமாகவும் வளர்வதை முன்னேற்ற வேண்டும் என்றும் ஷிச்சின்பீங் விருப்பம் தெரிவித்தார்.

தவிர, ஷிச்சின்பீங்கிற்கான அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்பின் நல்வாழ்த்துக்களை டில்லர்சன் முதலில் தெரிவித்தார். மேலும், ஷிச்சின்பீங்குடனான தொடர்பில் உயர்வாக கவனம் செலுத்துவதோடு, வெகுவிரைவில் சீன அரசுத் தலைவருடனான சந்திப்பை டிரம்ப் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினைக்கான அமெரிக்காவின் நிலைப்பாடு
• சீன-ஐரோப்பிய பயணியர் விமான சேவை ஒத்துழைப்பு
• பெருமளவில் விநியோகிக்கப்படும் பொருட்களின் விலை உயர்வு
• கடும் காற்று மாசுப்பாட்டிற்கான காரணத்தைச் சமாளிக்கும் சீன அரசவையின் ஏற்பாடு
• அமெரிக்காவின் வரி வசூலிப்பு சீர்திருத்தம்
• ஜி20 அமைப்பின் ஹம்பெர்க் உச்சி மாநாடு பற்றி வாங் யீ கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040