• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அணு ஆயுதங்களை தடை செய்வதில் சீனாவின் நிலைப்பாடு
  2017-03-20 18:01:38  cri எழுத்தின் அளவு:  A A A   

அணு ஆயுதங்களைத் தடை செய்யும் உடன்படிக்கை பற்றிய புதிய பேச்சுவார்த்தையில் சீனத் தரப்பு கலந்துகொள்ளாத போதிலும், பன்முகங்களிலும் அணு ஆயுதங்களைத் தடை செய்து ஒழிப்பதற்கு உறுதியாக ஆதரவு அளிப்பது பற்றிய சீனாவின் நிலைப்பாடு மாறாது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹுவா ச்சுன்யிங் அம்மையார் 20-ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 27-ஆம் நாள் நியூயார்க்கில் நடைபெறவுள்ள அணு ஆயுதங்களை தடை செய்யும் உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தை பற்றிய கேள்விக்கு பதிலளித்தபோது, அப்பேச்சுவார்த்தை தொடர்பான பிரச்சினைகள் குறித்து, தொடர்புடைய தரப்புகளுடன் சீனா மனம் திறந்த வகையிலும் ஆழமான முறையிலும் தொடர்பு கொண்டு வருவதாகஹுவா ச்சுன்யிங் குறிப்பிட்டார். மேலும், இப்பேச்சுவார்த்தையில் சீனத் தரப்பு கலந்து கொள்ள போவதில்லை என அண்மையில் முடிவு செய்துள்ளது. ஏற்கனவேயுள்ள சர்வதேச இராணுவக் கட்டுப்பாடு, படைகலக்குறைப்பு, நிதானமாக அணு ஆயுதங்களைக் குறைக்கும் கொள்கை ஆகிய துறைகளில் கருத்தில் கொண்டு, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலகப் போர் தந்திரம் மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதில் சீனா மேற்கொண்டுள்ள பொறுப்புணர்வை இது காட்டுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே துப்பாக்கிச் சண்டை
• வங்காளதேசத்தில் நிலக்கரி மின்சார நிலையங்களின் கட்டுமானம்
• ஸ்காட்லாந்தில் சீன மேற்குப் பகுதி பண்பாட்டின் பரப்புரை
• சிரியா பிரச்சினைக்கு தீர்வு பற்றி சீனாவின் கருத்து
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை தொடர்பான கருத்துரு
• ஈராக் இராணுவத்தின் வான் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் சாவு
• அமெரிக்கா:ஐ.எஸ் அதியுயர் தலைவர் இன்னும் உயிர்
• பாகிஸ்தான்:காஷ்மீர் பகுதியில் இந்தியப் படை தாக்குதல் நடத்துதல்
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040