• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சமத்துவம், திறப்பு, ஒத்துழைப்பு உள்ளடங்கிய கூட்டாளியுறவை உருவாக்க சீனா விருப்பம்
  2017-03-21 09:22:51  cri எழுத்தின் அளவு:  A A A   

கூட்டாளியுறவைக் கூட்டாக உருவாக்கி, அமைதி வளர்ச்சியைக் கூட்டாக நனவாக்குவது என்ற தலைப்பில், சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ மார்ச் 20ஆம் நாள், சீன வளர்ச்சி மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் முக்கிய உறையை ஆற்றினார்..

தான் நிறைவேற்ற வேண்டிய சர்வதேச பொறுப்புகளை சீனா ஆக்கமுடன் ஏற்று வருகிறது. ஆனால், உலகிற்கு தலைமை தாங்க சீனா எப்போதும் விரும்பவில்லை. உலகமயமாக்கக் காலத்தில், தனியாக செயல்படும் வீரருக்கு பதிலாக, கூட்டாக முயற்சி எடுக்கும் ஒத்துழைப்புக் கூட்டாளி உலகிற்கு வேண்டும். எதிர் நிலைக்குப் பதிலாக பேச்சுவார்த்தை மூலமும், கூட்டணிக்குப் பதிலாக கூட்டாளி மூலமும், பல்வேறு நாடுகளுடன் இணைந்து சமத்துவம், திறப்புத்தன்மை, ஒத்துழைப்பு ஆகிய உள்ளடங்கும் கூட்டாளியுறவை உருவாக்க சீனா விரும்புவதாக யாங்யீ தனது உரையில் தெரிவித்தார்.

தற்போது வரை, 97 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் வெவ்வேறு விதமான கூட்டாளி உறவுகளை சீனா நிறுவியுள்ளது. பெரிய நாடுகள், அண்டை நாடுகள், வளரும் நாடுகள் ஆகியவற்றுடனான கூட்டாளியுறவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இனி, தற்போதுள்ள அடிப்படையில், இந்த உறவின் உள்ளடக்கங்களை அதிகரித்து, உறவின் நிலையை உயர்த்தி, மேலும நெருங்கிய மற்றும் உலகளாவிய கூட்டாளியுறவுகளின் வலையமைப்பை உருவாக்க சீனா செயல்படும் என்று யாங்யீ குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• 2017ஆம் ஆண்டின் உலக எரியாற்றல் வினியோகம்
• சீனாவின் பாலியெஸ்ட்டர் நூல் மீது இந்தியாவின் பொருள் குவிப்பு விற்பனை எதிரான விசாரணை
• இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் செயல் குறித்து சீனாவின் கருத்து
• ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20ஆவது ஆண்டின் போது ஷிச்சின்பீங்கின் கருத்து
• கோடைக்காலத் தாவோஸ் கருத்தரங்கில் பங்கேற்கும் விருந்தினர்கள் வருகை
• உலகப் பொருளாதாரத் தலைவருடன் லீக்கெச்சியாங் சந்திப்பு
• டிரம்ப் அரசு முன்வைத்த குடியேற்றத் தடையின் ஒரு பகுதிக்கு அனுமதி
• கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை
• ஹாங்காங், தாய்நாட்டுடன் இணைந்த 20ஆவது ஆண்டு நிறைவுக்கான சாதனைகளின் கண்காட்சி
• சீனாவின் லாங்மார்ச்-5 ஏவூர்தியின் 2ஆவது பரி சோதனை ஏவுகலன்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040