• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நீர் நகரான ஷோ சிங்
  2017-03-22 11:05:14  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷோ சிங் நகரில் பயணம் மேற்கொண்டால், குவேய் ஜி ஷேன் மலையைப் பார்வையிடுவது கட்டாயம். அடுத்து, இம்மலையிலுள்ள காட்சித்தலங்கள் பற்றி கூறுகிறேன். முதலாவது, தா யூ லீங் காட்சித்தலம். தா யூ என்பவர், சீனாவின் முதலாவது வம்சகாலத்தின் பேரரசர் ஆவார். அவர் இயற்கை எய்திய பின்பு, குவேய் ஜி மலையில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பத்து ஆண்டுகால கடுமையான வெள்ளப் பெருக்கத்தை முயற்சியுடன் வெற்றிகரமாக கையாண்டார். அதுமட்டுமல்ல, நாடு என்ற சமூகம் மற்றும் அரசியல் துறையில் புதிய வடிவத்தை அவர் படைத்தார். இதுவே, பேரரசர் தா யூயின் மிகப் பெரிய சாதனையாகும். சீனத் தேசத்தின் வரலாற்று வளர்ச்சிக்கு அவர் ஈடிணையற்ற பங்காற்றியுள்ளார். அதனால், அவருக்குப் பிந்தைய சீனாவின் பல்வேறு வம்ச காலத்தின் பேரரசர்களும் மக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அவரை நினைவு கூர, அங்கு, யூ மியௌ எனும் கோயில் கட்டியமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில், 545ஆம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்டது. இது, தென் சீனாவில் மிகவும் அரிய பழங்காலத்தின் பெரிய கட்டிடமாகும்.

அடுத்து, பை நியௌ லே யுவான் காட்சித்தலம். இதற்குச் சீன மொழியில் பறவைகளின் பூங்கா என்று பொருள். இந்தப் பூங்கா, 30ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்புடையது. பூங்காவில், பறவைகளைத் தவிரவும், 130 வகை விலங்குகள் வளர்கின்றன. அவற்றில் பறவைகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டும். தற்போது சீனாவில் மிகப் பெரிய பறவைப் பூங்கா இதுவாகும். பூங்காவில், புறா சதுக்கம், பறவைகளின் கலைச் சிற்பங்கள், மனிதர்-பறவை-இயற்கை அருங்காட்சியகம் முதலிய அம்சங்கள் உள்ளன. குன்றில் கட்டியமைக்கப்பட்ட இந்தப் பூங்காவில், பறவைகளைக் கண்டுரசிக்க பத்துக்கும் மேலான பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மனிதர் மற்றும் இயற்கையுடனான நல்லிணக்கத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
• டமால்கஸ் சர்வதேச பொருட்காட்சி இடம் மீதான தாக்குதல்
• ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பின் இறுதி வலுவிடம் மீதான ராணுவ நடவடிக்கை
• பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதிப் போக்கில் இஸ்ரேல் அமைதி சக்தியின் பங்கினை அபாஸ் வலியுறுத்தல்
• 66 ஐ.எஸ் ஆயுததாரிகள் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளனர்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040