• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்
  2017-03-22 15:08:12  cri எழுத்தின் அளவு:  A A A   

தேர்தல் முடிவின் படி, இந்தியாவில் ஐந்து மாநில அரசுகள் அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று இந்தியடைம்ஸ் மார்ச் 21ஆம் நாள் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மாநிலங்களில், பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் வெற்றி பெற்றது.

தலைமை அமைச்சர் நரேந்திர மோடி மீதான ஐயங்களை, இந்தத் தேர்தல் முடிவு மாற்றியுள்ளது. மேலும், ஆளும் கட்சியின் தகுநிலையையும் இந்திய அரசியல் துறையில் மோடியின் வலிமைமிக்க சக்தியையும் இது வலுப்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. 2019ம் ஆண்டு நடைபெறும் பொது தேர்தல் போட்டியில் பாஜக வெற்றி பெறுவதற்கு இது அடிப்படையிடும். இதனால், எதிர்காலத்தில் இந்தியாவின் அரசியல், பொருளாதரம், வெளியுறவு ஆகிய துறைகளில் அது ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்தும்.

பாஜக முன்வைத்துள்ள பொருளாதாரச் சீர்திருத்தம் என்பது, இக்கட்சி வெற்றியடைந்ததன் முக்கிய காரணமாகும். இந்தக் கண்ணோட்டத்தின் மூலம் மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. 2017ஆம் ஆண்டு அரசின் வரவு செலவுத் திட்டத்தில், கிராமங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவது, விவசாயிகளுக்கு வட்டி குறைந்த கடன் வழங்கப்படுவது, பொருளாதாரச் சீர்திருத்தம் செய்து அதிகரிப்பை ஊக்குவிப்பது, ஊழலை ஒழிப்பது ஆகியவை உள்ளன. மேலும், பாஜக, தேர்தலுக்கான விரிவான திட்டங்களை வகுத்து, கூட்டணி மூலம் கட்சியின் ஈர்ப்பு சக்தியைப் பெருக்கியுள்ளது. தேர்தலின்போது, மோடி பலமுறை உத்தரப் பிரதேச மாநிலத்துக்குச் சென்று பாஜகவின் வேட்பாளர்களுக்கு பரப்புரை செய்து ஊக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களுக்கு பிறகு, காங்கிரஸ் இரண்டாம் இடம் தள்ளப்பட்டு, பாஜக மாநிலங்களவையில் முதல் இடம் வகிக்கிறது. கூட்டணிகளின் ஆதரவுகளோடு, இந்தியாவின் தற்போதைய கட்சி அமைப்பு முறையை மாற்றியுள்ளது. இந்தியாவில் முதலாவது பெரிய கட்சி என்ற தகுநிலையை இக்கட்சி உருவாக்கி வருகிறது என்று தி இந்து செய்தியேடு கூறியுள்ளது.

ஐந்து மாநிலங்களின் தேர்தல்களில் பாஜக பெற்றுள்ள ஆதரவு, 2019ஆம் ஆண்டு பொது தேர்தலில் மோடி போட்டியிடுவதற்கு உறுதியான அடிப்படையிட்டுள்ளது என்று இந்திய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மோடி படைத்துள்ள சாதனைகள் குறித்து பொது மக்கள் கருத்தின் வாக்குப் பதிவாகவும், இந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் ஆகும். மோடி முன்வைத்துள்ள சீர்திருத்த மற்றும் வளர்ச்சிக் கருத்து, இந்திய மக்கள் வளர்ச்சியை நனவாக்கும் விருப்பத்தை வெளிக்காட்டுகிறது. அடுத்த காலக்கட்டத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளும் வகையில், இது, குறிப்பிட்ட அளவில் தடைகளை நீக்கும். இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி, தொடர்ச்சியாகவும் நிலையாகவும் வேகமாகவும் அதிகரிக்கும்

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040