• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலண்டன் பயங்கரவாத தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் அடையாளம் வெளியீடு
  2017-03-24 09:10:52  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டன் தலைநகர் இலண்டனில் 22ஆம் நாளன்று பயங்கரவாத தாக்குதலை நடத்தி சுட்டுக் கொல்லப்பட்டவர், பிரிட்டனைச் சேர்ந்த 52 வயதான காலிட் மசூட் என்பவர் என்று இலண்டன் காவல்துறை 23ஆம் நாள் தெரிவித்துள்ளது. மேலும், பயங்கரவாத தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறை உறுதி செய்துள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றக் கட்டிடத்தின் அருகே பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்ப ஏற்பதாக, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு அமைப்பு 23ஆம் நாள் அறிவித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்த பிறகு, இலண்டன், பர்மிங்ஹம் உள்ளிட்ட பகுதிகளில் 8 பேரை பிரிட்டன் காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால், இந்த கைது நடவடிக்கை, இந்தப் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்பு உடையதா என்பது பற்றி காவல்துறை ஏதும் கூறவில்லை.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040