• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போஆவ் ஆசிய மன்றத்துக்கு ஷி ச்சின்பீங்கின் வாழ்த்துரை
  2017-03-25 13:53:45  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத்தலைவர் ஷி ச்சின்பீங் போஆவ் ஆசிய மன்றத்தின் 2017ஆம் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழாவுக்கு 25ஆம் நாள் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பினார்.

போஆவ் ஆசிய மன்றம் நிறுவப்பட்ட 16 ஆண்டுகளில் ஆசியாவை அடிப்படையாகக் கொண்டு உலகளவில் ஆசிய பொது கருத்து, ஆசிய ஒத்துழைப்பு, ஆசிய செல்வாக்கு ஆகியவற்றை முன்னேற்றுவதில் முக்கிய பங்காற்றியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உலகமயமாக்கம் மற்றும் தாராள வர்த்தகம்:ஆசியாவின் பார்வை என்பது நடப்பு போஆவ் ஆசிய மன்றக்கூட்டத்தின் தலைப்பாகும். பொருளாதார உலகமயமாக்கப் பிரச்சினையில் சர்வதேச சமூகம் குறிப்பாக ஆசிய நாடுகளின் கவனத்தை எதிரொலிக்கும் விதமாக இதன் தலைப்பு அமைந்துள்ளது. உலக மற்றும் பிரதேச பொருளாதாரம் எதிர்நோக்கியுள்ள குறிப்பிட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இக்கூட்டத்தில் கலந்துகொள்வோர் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் ஷி ச்சின்பீங் வேண்டுகோள் விடுத்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040