சீனத் துணைத் தலைமை அமைச்சர் சாங் காவ்லீ இக்கூட்டத்தின் துவக்க விழாவில், பொருளாதாரத்தின் உலக மயமாகத்தைக் கூட்டாக முன்னேற்றி, ஆசியா மற்றும் உலகின் ஒளிமயமான எதிர்காலத்தைத் துவக்கி வைப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பொருளாதாரத்தின் உலக மயமாக்கப் போக்கில் ஆசிய நாடுகள் செயலாக்க முறையில் பங்கெடுத்து, மாபெரும் வளர்ச்சி பெற்று ஆசிய அற்புதத்தை உருவாக்கியுள்ளன என்று அவர் உரையில் சுட்டிக்காட்டினார். இந்தப் போக்கில் ஆசிய தனிச்சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்க வழிமுறையை ஆசிய நாடுகள் உருவாக்கி அதிக அனுபவங்களைத் தொகுத்துள்ளன என்றும் சாங் காவ்லீ குறிப்பிட்டார்.