• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங்கின் 5ஆவது நிர்வாக அதிகாரி:கேர்ரிலேம் செங் யெட்-ங்கர்
  2017-03-26 18:18:46  cri எழுத்தின் அளவு:  A A A   
ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் 5ஆவது நிர்வாக அதிகாரிக்கான மார்ச் 26ஆம் நாள் நடைபெற்ற தேர்தலில் 777 வாக்குகள் பெற்று கேர்ரிலேம் செங் யெட்-ங்கர் (Carrie Lam Cheng Yuet-ngor) அம்மையார், வெற்றிப்பெற்றுள்ளார். இவர் ஹாங்காங் தாய்நாட்டுடன் இணைந்த பிறகு பதவி வகிக்கவுள்ள முதலாவது பெண் நிர்வாக அதிகாரி ஆவார்.

இன்று காலை 9 முதல் 11 மணி வரை தேர்தல் குழுவைச் சேர்ந்த சுமார் 1200 உறுப்பினர்கள் முக்கிய வாக்குச் சாவடிக்குச் சென்று, வாக்கு அளித்தனர். இதில் மூன்று பேர் போட்டியிட்டனர்.

ஹாங்காங் அடிப்படை சட்டம், ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி தேர்தல் விதி ஆகியவற்றின் படி, 600க்கு மேலான வாக்குகளைப் பெற்றவர் நிர்வாக அதிகாரியாக பதவி ஏற்பார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கேர்ரிலேம் செங் யெட்-ங்கர் உரைநிகழ்த்துகையில், "ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்" என்ற கொள்கையைப் பேணிகாக்க முழு மூச்சுடன் முயற்சி செய்து, ஹாங்காங்கின் மைய மதிப்பை உறுதிப்படுத்தி, ஹாங்காங் சமூகத்துடன் ஒன்றுப்பட்டு தொடர்ந்து வளர்ச்சியடைய பாடுபட வேண்டும் என்று குறிப்பிட்டார். (கலைமகள்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040