• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவின் மணிப்பூரில் பயணியர் வண்டி விபத்து
  2017-03-27 16:10:25  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவின் வட கிழக்குப் பகுதியிலுள்ள மணிப்பூர் மாநிலத்தில் 27ஆம் நாள் கடும் போக்குவரத்து விபத்து ஒன்று நிகழ்ந்தது. இதில் குறைந்தது 10பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேலானோர் காயமடைந்தனர் என்று இந்தியக் காவற்துறை தெரிவித்தது.

பயணியர் வண்டி ஒன்று மணிப்பூரின் தலைநகரான இம்பாலுக்குச் சென்று கொண்டிருந்த போது மலையிலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்து குறித்து தொடர்புடைய பிரிவு புலனாய்வை நடத்தி வருகிறது. காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். (நிலானி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040