• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேபாளத்தில் சீனத் தொழில் நிறுவனங்களின் முதலீடு அதிகரிப்பு
  2017-03-28 10:38:33  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த சில ஆண்டுகளாக, சீனத் தொழில் நிறுவனங்கள் நேபாளத்தில் மேற்கொண்டு வரும் முதலீடு மற்றும் ஒத்துழைப்பு விரைவாக அதிகரித்து வருகின்றன. 27-ஆம் நாள் சீனச் சர்வதேச வர்த்தக முன்னேற்றச் சங்கமும் சீனாவுக்கான நேபாளத் தூதரகமும் கூட்டாக ஏற்பாடு செய்த நேபாள முதலீட்டு வாய்ப்புக்கான வட்ட மேசைக் கூட்டத்திலிருந்து கிடைத்த தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனச் சர்வதேச வர்த்தக முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் ஜியாங் செங் வெய் இக்கூட்டத்தில் பேசுகையில், 2017-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் இறுதி வரை, நேபாளத்தில் சீனத் தொழில் நிறுவனங்கள் நேரடியாக மேற்கொண்டுள்ள முதலீட்டு அளவு 35கோடியே 50இலட்சம் அமெரிக்க டாலராகும் என்று குறிப்பிட்டார். அதோடு, அந்நாட்டில் அதிகமாக முதலீடு செய்துள்ள சீனத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 30ஐ தாண்டியுள்ளது. நீர் மின்னாற்றல், விமானப் பயணம், கனிம அகழ்வு, மருத்துவச் சிகிச்சை முதலிய துறைகளில், இந்த தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். (தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040