• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் தூதஞ்சல் சேவை எண்ணிக்கை உலகில் 40 விழுக்காடு
  2017-03-28 15:21:24  cri எழுத்தின் அளவு:  A A A   
2016ஆம் ஆண்டு சீன தூதஞ்சல் சேவை வளர்ச்சி குறியீட்டு எண் அறிக்கையை சீன தேசிய அஞ்சல் பணியகம் 28ஆம் நாள் வெளியிட்டது. சீனாவின் தூதஞ்சல் சேவையின் எண்ணிக்கை மற்றும் அளவு, உலக அளவில் 40 விழுக்காடாகி, முதலிடம் வகித்து வருகிறது. இது, உலக தூதஞ்சல் சேவை எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு 60 விழுக்காடு பங்காற்றியுள்ளது என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டது.

2016ஆம் ஆண்டு, தூதஞ்சலின் மூலம் விற்பனை செய்யப்பட்ட வேளாண் உற்பத்திப் பொருட்களின் மதிப்பு 10 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியது. 12 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள ஆக்கத்தொழிலின் உற்பத்திப் பொருட்கள் தூதஞ்சல் சேவை மூலம் அனுப்பப்பட்டன என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விரைவான வளர்ச்சியுடன், தூதஞ்சல் சேவைக்கான மனநிறைவும் தொடர்ந்து உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040