• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மது நகரான ஷோ சிங்
  2017-03-28 16:21:43  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் செஜியாங் மாநிலத்தின் ஷோ சிங் நகரில் மது தயாரிப்புக்கு நீண்ட வரலாறுள்ளது. பழங்காலம் தொட்டு இது சீன மக்களிடையில் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒரு சின்ன கதையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். வாங் சி ட்சி என்பவர் பழங்கால சீனாவில் மிகவும் புகழ் பெற்ற கை எழுத்துக் கலைஞர். ஒரு நாள் அவர் ஷோ சிங் நகரின் லேன் டிங் என்ற காட்சிக்கூடத்தில் சிறப்பு மிக்கதொரு விருந்தை நடத்தினார். 42 நண்பர்கள் நதி ஒன்றின் இரு கரைகளிலும் அமர்ந்தனர். மதுவால் நிரம்பிய கோப்பை நதியில் மிதக்க விட்டு பாய்ந்தோடி வந்தது. இந்தக் கோப்பை யார் முன் நிற்கிறதோ அல்லது சுழல்கிறதோ, அவர் உடனடியாக கவிதை படைக்க வேண்டும். இல்லாவிட்டால், தண்டனையாக மது குடிக்க வேண்டும். அனைவரின் கவிதைகளைத் திரட்டி வாங் சி ட்சி கட்டுரை ஒன்றை எழுதினார். இக்கட்டுரை சீன மாணவர்களின் பாட நூலில் இடம் பெற்றுள்ளது. அப்போது, அவர்கள் குடித்த மது, ஷோ சிங் மதுவாகும். மது அவர்களின் படைப்பு உயிராற்றலை வெளிக்கொணர்ந்துள்ளது. இக்கதையால், ஷோ சிங் மது மட்டுமல்ல, லே டின் காட்சிக்கூடமும் ஷோ சிங் நகரின் ஒரு புகழ் பெற்ற காட்சித்தலமாக மாறியுள்ளது. தற்போது லே டின் காட்சிக்கூடத்தில் அன்றைய விருந்தை மாதிரியாகக் கொண்டு அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெறும். மேலும், லே டின் காட்சித்தலத்தில் கை எழுத்து அருங்காட்சியகம் ஒன்று கட்டியமைக்கப்பட்டுள்ளது. சீனாவின் தலைசிறந்த கை எழுத்து கலைஞர்களின் படைப்புகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040