• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017-2021ஆம் ஆண்டு சீனத் தொலைநோக்குத் திட்டம் வெளியீடு
  2017-03-29 15:14:06  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ﹒நாவின் உலக உணவுத் திட்ட அலுவலகம் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் 2017-2021ஆம் ஆண்டுக்கான சீனாவின் தொலைநோக்குத் திட்டத்தை வெளியிட்டது. சீன வேளாண் அமைச்சகம் மற்றும் பிற ஒத்துழைப்புக் கூட்டுறவு அமைப்புகளுடன் இணைந்து, பட்டினி இல்லாத உலகத்தை உருவாக்கி உலகின் தொடரவல்ல வளர்ச்சியை உலக உணவுத் திட்ட அலுவலகம், முன்னேற்றும்.

இந்தத் தொலைநோக்குத் திட்டப்படி, அடுத்த 5 ஆண்டுகளில் சீனாவின் கிராமங்களில் கட்டாயக் கல்வி பெறும் மாணவர்களின் ஊட்ட சத்து உணவுத் திட்டத்தை விரிவாக்குவது, வறுமைக்குள்ளான விவசாயிகளுக்கு உதவியளிப்பது முதலிய துறைகளில் உலக உணவுத் திட்ட அலுவலகம் சீன அரசுக்கு ஆதரவளிக்கும். சீனா, பிற வளரும் நாடுகளுடன் தானியப் பாதுகாப்பு, ஊட்டச் சத்து மற்றும் வறுமை ஒழிப்பின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளது. இந்த ஐந்தாண்டு திட்டத்தின் வரவு செலவு 2கோடியே 90லட்சம் அமெரிக்க டாலராகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040