• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகளவில் ரென்மின்பியின் கையிருப்பு
  2017-04-01 09:34:55  cri எழுத்தின் அளவு:  A A A   
உலகளவில் அந்நிய செலாவணியான ரென்மின்பியின் கையிருப்பு நிலைமையை சர்வதேச நாணய நிதியம் மார்ச் 31ஆம் நாள் முதன்முறையாக வெளியிட்டது.

அதன் புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டின் 4ஆவது காலாண்டு வரை, அந்நிய செலாவணியான ரென்மின்பியின் கையிருப்பு தொகை 8451 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. அதிகாரப்பூர்வ அந்நிய செலாவணி கையிருப்பின் கட்டமைப்புக்கான அறிக்கையில் இடம்பெற்ற உறுப்பு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அந்நிய செலாவணி கையிருப்பில் இது 1.07 விழுக்காடு வகித்துள்ளது.

உலகளவில் ரென்மின்பியின் கையிருப்பு நிலைமையை வெளிப்படுத்தும் வகையில், கடந்த அக்டோபர் திங்கள் முதல், அதிகாரப்பூர்வ அந்நிய செலாவணியில் நாணயங்களின் கட்டமைப்புக்கான காலாண்டு அறிக்கையில், ரென்மின்பி தனியான ஒரு பட்டியலில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. (வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040