• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க தலைவர் சந்திப்பில் அமெரிக்க சமூகத்தின் கவனம்
  2017-04-07 10:00:24  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா மற்றும் அமெரிக்காவின் அரசுத் தலைவர்கள் உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 6 மற்றும் 7ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தின் மர்-அ-லகோவில் சந்திப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சர்வதேசம், பிரதேசம் மற்றும் இரு தரப்பு பிரச்சினைகள் குறித்து, இரு நாட்டு அரசுத் தலைவர்கள், ஆழமாகவும் நேர்மையாகவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் பல்வேறு துறையினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மார்ச் இறுதியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சென் ஸ்பைசெர் பேசுகையில், இரு தலைவர்கள், தங்களது முன்னுரிமை பணிகளின் முக்கியத்துவம் பற்றி, கருத்துக்களைப் பரிமாறவுள்ளனர். அத்துடன், இரு நாட்டுறவுக்கு முன்னேறிய ஒரு நெறியையும் வகுக்கவுள்ளனர் என்று கூறியிருந்தார்.

சீனாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஸ்டாப்ல்டன் ராய் பேசுகையில், சந்திப்பின் மூலம் இரு தலைவர்கள் ஒருவரை ஒருவர் மேலும் செவ்வனே அறிந்து கொள்ள முடியும். பல்வேறு பிரச்சினைகளை இணைந்து சமாளிக்கத் துணை புரியும் உறவை நிறுவ அவர்கள் பாடுபடுவர் என்று ஸ்டாப்ல்டன் ராய் கூறினார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரயர் ஜாசப் எஸ் நெய் பேசுகையில், கருத்துவேற்றுமையை விட, ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கு விளைவிக்கும் நன்மைகள் மேலதிகமாக இருப்பதை இந்தச் சந்திப்பு முழுமையாக காட்ட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். (ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040