• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷி ச்சின்பிங்-கேரி லேம் செங் யுயேட்-ங்கோர் சந்திப்பு
  2017-04-11 18:16:34  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 5ஆவது நிர்வாக அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கேரி லேம் செங்யுயேட்—ங்கோர் அம்மையாரைச் சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 11ஆம் நாள் பிற்பகல் பெய்ங்கில் சந்தித்துரையாடினார்.

கடந்த 20 ஆண்டுகளில், ஒரே நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கொள்கையின் நடைமுறையாக்கம் ஹாங்காங்கில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஹாங்காங்கில் செழுமையும் நிதானமும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சமூகம் இதற்கு பெரும் பாராட்டு தெரிவித்துள்ளது என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார். புதிய நிர்வாக அதிகாரியாக, தங்கள் கடமைகள் அதிகம். ஒரே நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள், ஹாங்காங் மக்களே ஹாங்காங்கை ஆட்சி புரிவது, உயர்ந்த தன்னாட்சி ஆகியவற்றில் ஊன்றி நிற்பது பற்றிய நடுவண் அரசின் மனவுறுதி மாறாது. நீங்களும் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் புதிய அரசும் சட்டத்தின்படி நிர்வகிப்பதை முழுமூச்சுடன் ஆதரிப்போம் என்றும் ஷீ ச்சின்பிங் தெரிவித்தார்.(மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040