• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தாராள வர்த்தக த்துக்கு ஆதரவு: மெர்கல்
  2017-04-11 18:16:55  cri எழுத்தின் அளவு:  A A A   
சர்வதேச நிதியம், உலக வர்த்தக அமைப்பு, உலக வங்கி, பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு, சர்வதேச உழைப்பாளர் அமைப்பு ஆகிய அமைப்புகளின் தலைவர்களை ஜெர்மன் தலைமை அமைச்சர் ஏஞ்சலா மெர்கல் அம்மையார் தனது அலுவலகத்தில் 10ஆம் நாள் சந்தித்து, அவர்களுடன் சர்வதேசப் பொருளாதாரம் மற்றும் நிதித் துறையிலான சூடான பிரச்சினைகள் பற்றி விவாதித்தார்.
சந்திப்புக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பன்னாட்டு வர்த்தக அமைப்புமுறைக்கு அவர்கள் ஒரு மனதாக ஆதரவு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 நாடுகள் குழுமத்தின் நடப்பு தலைவர் நாடாக ஜெர்மனி திகழ்கின்றது. இவ்வமைப்பின் உச்சிமாநாடு வரும் ஜுலை திங்கள் ஜெர்மனியின் ஹான்பெர்க் நகரில் நடைபெறும். (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040