• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மற்றும் சௌ தொமே மற்றும் பிரின்சி தலைமையமைச்சர்கள் பேச்சுவார்த்தை
  2017-04-13 09:17:48  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் ஏப்ரல் 12-ஆம் தேதி பெய்ஜிங்கில் சௌ தொமே மற்றும் பிரின்சி குடியரசின் தலைமையமைச்சர் பேட்ரைஸ் துரோவோதாவைச் சந்தித்துரையாடினார்.

செள தொமே மற்றும் பிரின்சி குடியரசு, சீனாவுடனான தூதர் நிலைத் தூதாண்மை உறவை மீண்டும் உருவாக்கிய பிறகு, இரு நாட்டுறவுக்கான புதிய அத்தியாயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், இரு தரப்பு நட்பு ஒத்துழைப்பு முன்னேறுவது உறுதி என்று துரோவோதா தெரிவித்துள்ளார். மேலும், சீனாவை நண்பராகவும் கூட்டாளியாகவும் கருதும் செள தொமே மற்றும் பிரின்சி, ஆப்பிரிக்காவுக்கான சீனாவின் கொள்கையை அதிகமாக பாராட்டுவதாக தெரிவித்தார்.

இரு நாட்டு தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்குப் பின், பொருளாதாரம், தொழில் நுட்பம், மக்களிடையேயான பரிமாற்றம், அடிப்படை வசதிகளின் கட்டுமானம், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் தொடர்பான இரு தரப்பு ஒத்துழைப்பு ஆவணங்கள் கையொப்பமாகின.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு முடிவு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்னேற்றம்
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040