• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கொரியத் தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினைக்கு தீர்வு முறை பற்றிய சீனாவின் கருத்து
  2017-04-13 18:13:43  cri எழுத்தின் அளவு:  A A A   

கொரியத் தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினையைத் தீர்ப்பது பற்றி ரஷியா மற்றும் அமெரிக்காவின் புதிய கருத்துக்களில் சீனா கவனம் செலுத்தியுள்ளது என்றும், அரசியல் தீர்வு முறை என்ற கோட்பாடு தொடர்பாக பல்வேறு தரப்புகளும் பொதுக் கருத்துக்கு வந்து, முயற்சி மேற்கொள்ள வேண்டும் என விரும்புவதாகவும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லூ காங்  13ஆம் நாள் தெரிவித்தார்.

ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திலேசனும் சந்திப்பு நடத்திய பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினையில் இரு தரப்புகளுக்கிடையே கருத்து வேற்றுமை நிலவிய போதிலும், அரசியல் ரீதியான தீர்வு முறை, இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரேயொரு வழிமுறையாகும் என்று தெரிவித்தனர். இது குறித்து லூ காங் பேசுகையில், பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம், அமைதி முறையில் கொரியத் தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையை நனவாக்கி, தீபகற்பத்தின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிகாப்பது, இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரேயொரு வழிமுறையாகும் என்றும், இது சீன அரசின் உறுதியான நிலைப்பாடாகும் என்றும் தெரிவித்தார்.(மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு முடிவு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்னேற்றம்
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040