• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா, நாணய மாற்று விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நாடு அல்ல
  2017-04-15 17:02:27  cri எழுத்தின் அளவு:  A A A   
பன்னாட்டுப் பொருளாரம் மற்றும் நாணய மாற்று விகிதக் கொள்கை அறிக்கையை அமெரிக்க நிதி அமைச்சகம் 14ஆம் தேதி வெளியிட்டது. சீனா உள்பட அதன் முக்கிய வர்த்தகக் கூட்டுறவு நாடுகள் சமனற்ற வர்த்தக மேம்பாட்டுக்காக நாணய மாற்று விகிதத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்றும், ஆனால், சீனா, ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா உள்ளிட்ட 6 பொருளாதாரச் சமூகங்கள் மாற்று விகிதக் கொள்கைக்கான கண்காணிப்பு பட்டியலில் தொடர்ந்து சேர்க்கப்பட்டிருக்கும் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் ஒரு பொருளாதாரச் சமூகத்தின் மிகைத் தொகை 2000 கோடி அமெரிக்க டாலருக்கு மேல் இருப்பது, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நடப்புக் கணக்கிலுள்ள மிகைத் தொகை குறைந்தது 3 விழுக்காடு வகிப்பது, மாற்று விகிதச் சந்தையில் தொடர்ந்து ஒரு சார்பாக தலையிடுவது ஆகிய மூன்று வரையறைகளுடனும் தொடர்புடையது என்றால், அதனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி, பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இவற்றில் இரண்டு வரையறைகளுக்குப் பொருந்தினால், அது அமெரிக்காவின் குறிப்பிட்ட கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்படும். (வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரிட்டனின் முதலாவது நிலைப்பாட்டு ஆவணம்
• ஈரான் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை பற்றிய ஈரானின் நிலைப்பாடு
• ரஷிய-இந்திய ராணுவப் பயிற்சி
• வாங் யீ-லாவ்ரோவ் தொலைபேசியில் பேச்சு
• சீனாவில் நடைபெற்ற ஜப்பானின் நிபந்தனையின்றி சரண நிறைவு நடவடிக்கைகள்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040