• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குவங்டொங்கில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
  2017-04-16 16:55:30  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் குவங்டொங் மாநிலம், குவங்சோ நகரில் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டம் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக குவங்சோ துணைத் தூதரகத்தின் தூதர் சைலாஸ் தங்கல், சீன வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகள் ஆகியோர் பங்கேற்றனர். அத்துடன், திரைப்படப் பின்னணிப் பாடகர் வேல் முருகன் மற்றும் விஜய் தொலைக்காட்சி புகழ் அமுதவாணன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அவர்கள் வழங்கிய சிறப்புக் கலை நிகழ்ச்சிகள், விழாவில் கலந்து கொண்டோரின் உள்ளத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

சீன வானொலிக்கு சைலாஸ் தங்கல் அளித்த பேட்டியில், சீன அளவில் குவங்சோவின் உள்நாட்டு உற்பத்தியின் பங்கு சிறப்பான இடத்தை வகிக்கிறது என்று தெரிவித்தார். சீன கலாசாரம் மற்றும் மக்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதும், வர்த்தகம் புரிபவருடன் நல்ல நட்பை போற்றுதலும் தொழில் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்ற ஆலோசனையையும் அவர் வழங்கினார்.

பாரம்பரிய உடையில் வணிகர்கள், மாணவர்கள், குழந்தைகள் என நூற்றுக்கும் அதிகமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040