• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பாகிஸ்தானின் கைபர்-பக்துன்குவா மாநிலத்தின் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு பற்றிய விளம்பரக்கூட்டம்
  2017-04-17 14:41:42  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன-பாகிஸ்தானின் கைபர்-பக்துன்குவா மாநிலத்தின் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு பற்றிய விளம்பரக் கூட்டத்தின் துவக்க விழா 17ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன-பாகிஸ்தான் நட்பு சங்கத்தின் தலைவர் ஷா சு காங், பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாநிலத்தின் முதல் அமைச்சர் பர்வேஷ் கட்டாக், இரு நாட்டு வேளாண் துறை, தொழிற்துறை, அடிப்படை வசதிகள், கல்வி, சுற்றுலா, பண்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில் முனைவோர் இத்துவக்க விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

சீன-பாகிஸ்தான் நட்பு சங்கத்தின் தலைவர் திரு ஷா சு காங் துவக்க விழாவில் உரை நிகழ்த்திய போது, சீனத் தொழில் நிறுவனங்கள் குறிப்பாக சீனாவின் அரசு சாரா தொழில் நிறுவனங்கள் சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழியின் கட்டுமானத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்க வேண்டும் என்றும், இரு நாட்டு அரசுகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள், சீனத் தொழில் நிறுவனங்கள் பாகிஸ்தானில் நுழைவதற்கு உதவி அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஆப்கானிஸ்தான் தேசிய அமைதி போக்கு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது பற்றிய தீர்மானம்
• சியோல் நகரில் தாட் பரவலை எதிர்க்கும் பேரணி நடைபெற்றது
• உலக வறுமை ஒழிப்பு பற்றிய கருத்தரங்கு
• ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸுடனான சந்திப்பு
• அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சிந்திப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040