அணு ஆயுதங்களை அதிகரிக்கும் வட கொரியாவின் செயலைத் தடுத்து, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையை நனவாக்குவது என்பது அமெரிக்காவின் அடிப்படை நோக்கமாகும். தற்போதைய நிலைமை தொடரக் கூடாது. பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், ஆயுதங்களைத் தவிர்த்து அனைத்து அமைதியான வழிமுறைகளிலும் முயற்சிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுத் தலைவரின் தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான உதவியாளர் ஹெர்பெர்ட் மைக்மாஸ்டர் 16ஆம் நாள் தெரிவித்திருந்தார். அவரது கூற்று தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கையில், பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழிமுறையில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையை நனவாக்கி, அதன் அமைதியைப் பேணிகாப்பது, இப்பிரச்சினைக்கான ஒரேயொரு தீர்வாகும் என்று லூ காங் குறிப்பிட்டார்.(வான்மதி)