• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எச்-1பி விசா கொள்கையில் டிரம்ப் திருத்தம்
  2017-04-19 09:18:11  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க உற்பத்திப் பொருட்களை வாங்குவது அமெரிக்கர்களைப் பணி அமர்த்துவது தொடர்பான நிர்வாக்க் கட்டளையில் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் 18ஆம் நாள் கையெழுத்திட்டார். இதில் எச்-1பி விசா கொள்கை பற்றி திருத்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசு வாரியங்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 எச்-1பி பணி விசா திட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டது. அதன் விளைவாக, பல அமெரிக்கத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர். அமெரிக்கர்களின் சம்பளமும் குறைந்துள்ளது என்று அமெரிக்க அரசுத் தலைவருக்கான தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் தெரிவித்திருந்தார். அரசுத் தலைவர் பதவி ஏற்ற பிறகு, இந்நிலைமையை மாற்றுவேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.
தற்போது அமெரிக்காவில் ஆண்டுக்கு 85 ஆயிரம் எச்-1பி விசாக்கள் வரை வழங்கப்படுகின்றன. (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040