• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேபாளம்: 17000 மெகாவாட் மின்சார உற்பத்தி திட்டம்
  2017-04-19 14:01:29  cri எழுத்தின் அளவு:  A A A   
நேபாளத்தில் அடுத்த 7 ஆண்டுகளுக்குள் 17000 மெகாவாட் மின்சார உற்பத்தி இலக்கை நனவாக்கும் திட்டத்தை அந்நாட்டு எரியாற்றல் துறை அமைச்சர் ஜனார்தன் ஷர்மா அண்மையில் வெளியிட்டார்.

காத்மாண்டுவில் நடைபெற்ற பொருளாதார வளர்ச்சிக்கான மின்சார வினியோகத்தின் செல்வாக்கு என்ற கூட்டத்தில், ஷர்மாகூறுகையில், பல்வேறு முதலீடுகளின் உதவியுடன், இந்த இலக்கு நனவாக்கப்படும். அத்துடன், நேபாளத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதமும் 10விழுக்காடாக அதிகரிக்கப்படும் என்றார். (நிலானி )

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040