• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
டாஃபா நீர் வாய்க்காலின் புதிய பயணம்
  2017-04-19 15:03:03  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் குய்சோ மாநிலத்தின் சூன்யீ நகரிலுள்ள தொலைத்தூர மலையில், டாஃபா எனும் வாய்க்கால் மிகவும் புகழ்பெற்றது. 36 ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த வாய்க்கால், இன்பமான வாழ்க்கையைக் கொண்டு வரும் என்ற உள்ளூர் மக்களின் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, சூன்யீ நகரிலுள்ள துவான்ஜியா ஊரில் வாழ்கின்ற டாங் என் ஜூ என்பவர் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு, ஆண்டுக்கு சுமார் 80 ஆயிரம் யுவானை ஈட்டி வருகிறார். ஆனால், 20க்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்பு, அவரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் 3000ஐக் கூட எட்டவில்லை. டாஃபா வாய்க்கால் கட்டப்பட்ட பிறகு, மக்களுக்கும் கால்நடைகளுக்கும் ஏதுவாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்த வாய்க்கால், தண்ணீர் பற்றாக்குறையுள்ள துவான்ஜியே ஊருக்கு நீர் வளத்தை அளிப்பதுடன், உள்ளூர் மக்களுக்கும் வாழ்க்கை மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, உள்ளூரின் நெல் வயல் நிலப்பரப்பு 50 ஹெக்டரை எட்டியுள்ளது. உள்ளூர் மக்கள், வாய்க்காலின் மூலம் கிடைக்கும் நீரைப் பயன்படுத்தி, தனிச்சிறப்பு வாய்ந்த வேளாண்மையில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.

தற்போது டாஃபா வாய்க்காலின் புகழ், மென்மேலும் அதிகரித்து வருகிறது. துவான்ஜியா ஊர், கிராமப்புறச் சுற்றுலாவை மேற்கொள்ள விரும்புகிறது. இளமையான டாஃபா வாய்க்கால், புதிய காலத்தில் புதிய பயணத்தைத் துவங்குகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு முடிவு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்னேற்றம்
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040