• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் காவற்துறையினர் ஒருவர் பலி
  2017-04-21 10:03:11  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள புகழ்பெற்ற கடைத்தெருவான சோமப்ஸ் எலிசேயில், நிறுத்தப்பட்டிருந்த காவற்துறை வாகனத்திலுள்ள காவற்துறையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், காவற்துறையைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இருவர் கடும் காயமடைந்தனர். காவற்துறையினரை நோக்கிச் சுட்ட பயங்கரவாதியும் சுட்டுக்கொள்ளப்பட்டதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் 20ஆம் நாள் தெரிவித்தது.

இந்த பயங்கரவாதியின் அடையாளம் குறித்து, காவற்துறை புலனாய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக ஐ.எஸ் அதிதீவிரவாத அமைப்பு, அமாக் செய்தி நிறுவனம் மூலம் அறிவித்துள்ளது.

தவிர, பிரெஞ்சு அரசுத் தலைவர் பிரெஞ்சுவா ஹொலந்தே அதே நாளிரவு உரைநிகழ்த்தியபோது, பயங்கரவாத எதிர்ப்புக்குப் பொறுப்பேற்றுள்ள அரசு வழக்கறிஞர்கள் தொடர்புடைய புலனாய்வினைத் தொடங்கியுள்ளனர் என்றார். அத்தோடு, பிரான்சில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொதுத் தேர்தல் போக்கில் நாட்டின் பல்வேறு அரசு வாரியங்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
• வாங் யீ:மத்திய கிழக்கு பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு
• ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்
• சௌதி அரேபியாவின் புதிய பட்டத்துக்குரிய இளவரசருக்கு சீனா வாழ்த்துக்கள்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகருடன் அப்பாஸின் சந்திப்பு
• ஷாங்காயில் நடைபெறும் பிரிக்ஸ் நாட்டு வணிக அமைச்சர்கள் கூட்டம்
• 2017 சீன-இந்தியப் பன்னாட்டு யோக விழா துவக்கம்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகரின் இஸ்ரேல் பயணம்
• காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை – 3 தீவிரவாதிகள் சாவு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040