• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ரஷிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
  2017-04-21 18:24:10  cri எழுத்தின் அளவு:  A A A   
கசகஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அஸ்தானாவில் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவை 21ஆம் தேதி சந்தித்தார்.

வாங் யீ பேசுகையில், சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் குறித்து சீனாவும் ரஷியாவும் நெருங்கிய ஒருங்கிணைப்பை நிலைநிறுத்தி வருகின்றன. இருதரப்பு உறவும் சீராக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று தெரிவித்தார்.

லாவ்ரோவ் கூறுகையில், ரஷிய அரசுத் தலைவர் புதின் அடுத்த திங்கள் பெய்ஜிங்கில் நடைபெற உள்ள ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இதனை வாய்ப்பாகக் கொண்டு, ஐரோப்பிய-ஆசிய பொருளாதார ஒன்றியத்தை பட்டுப்பாதை பொருளாதார மண்டலத்துடன் செவ்வனே இணைத்து, ரஷிய-சீன பன்முக நெடுநோக்கு கூட்டுறவின் கட்டுமானத்தை முன்னேற்ற ரஷியா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதப் பிரச்சினை, சிரியா பிரிச்சினை உள்ளிட்டவை குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸுடனான சந்திப்பு
• அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சிந்திப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினைக்கான அமெரிக்காவின் நிலைப்பாடு
• சீன-ஐரோப்பிய பயணியர் விமான சேவை ஒத்துழைப்பு
• பெருமளவில் விநியோகிக்கப்படும் பொருட்களின் விலை உயர்வு
• கடும் காற்று மாசுப்பாட்டிற்கான காரணத்தைச் சமாளிக்கும் சீன அரசவையின் ஏற்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040