• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா-ஐரோப்பா சரக்கு தொடர்வண்டி சேவை ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து
  2017-04-23 16:31:35  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான சரக்கு தொடர்வண்டி சேவை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றில், சீனா, பெலாரஸ், ஜெர்மணி, கசகஸ்தான், மங்கோலியா, போலாந்து, ரஷியா ஆகிய ஏழு நாடுகளின் இருப்புப் பாதைத் துறைகளும் அண்மையில் கையெழுத்திட்டுள்ளன என்று 22ஆம் நாள் சீன இருப்புப் பாதை நிறுவனத்தில் இருந்து கிடைத்த தகவல் தெரிவித்துள்ளது.

ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே சரக்கு தொடர்வண்டிகளின் சந்தைப் பங்குகளை உயர்த்தி, இந்த இருப்புப் பாதைகளின் அருகிலுள்ள நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் வர்த்தக ஒத்துழைப்பையும் முன்னெடுக்கும் நோக்கில், இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டி 2011ஆம் ஆண்டு இயங்கியது முதல் இது வரை, 3,557 தொடர்வண்டிப் பயணங்கள் பதிவாகியுள்ளன. தற்போது, சீனாவில் 27 நகரங்களுக்கும் ஐரோப்பாவில் 27 நாடுகளின் 28 நகரங்களுக்கும் இந்த சரக்கு தொடர்வண்டி பயணிக்கும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040