• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவுடன் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ள:சீனா விருப்பம்
  2017-04-23 17:53:48  cri எழுத்தின் அளவு:  A A A   

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றி இந்திய பார்வையாளர் ஆய்வு நிதியம் அண்மையில் மும்பையில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இந்தியாவுக்கான சீனத் தூதரகத்தின் அமைச்சர் லியூ ச்சின்சுங் இதில் கலந்து கொண்டு உரையாடினார்.
தற்போதைய ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணி தரை மற்றும் கடல் வழி என மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பண்டைகால பட்டுப் பாதை மற்றும் ஆசியாவின் மறுமலர்ச்சியை இது பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்று அவர் கூறியுள்ளார். பண்டைக்காலத்தில் பட்டுப் பாதையின் வளர்ச்சிக்கு சீனாவும் இந்தியாவும் கூட்டாக பங்கெடுத்து, அமைதி மற்றும் ஒத்துழைப்பு,வெளிநாட்டுத் திறப்பு, ஒன்றை ஒன்று கற்றுக்கொள்வது, கூட்டு வெற்றி பெறுவது ஆகிய துறைகளில் முன்மாதிரிகளை உருவாக்கியுள்ளன. பட்டுப் பாதையின் மறுமலர்ச்சிக்கு நம் இரு நாடுகளும் மேலும் கூட்டாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று லியூ ச்சிசுங் கருத்து தெரிவித்தார்.
இந்திய தரப்பு கவனத்துக்குரிய சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதை பற்றி குறிப்பிடுகையில், சீன-பாகிஸ்தான் ஒத்துழைப்பு, அரசுரிமைக்கான இந்தியாவின் கோரிக்கையைப் பாதிக்காது. நெடுநோக்கு பார்வையில் இந்த ஒத்துழைப்பு இந்தியாவுக்கும் ஆசியாவுக்கும் நன்மை பயக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா முன்வைத்த ப்ரோஜெட் மொசோன் எனும் திட்டப்பணியும் ஸ்பேஸ் ரூட் எனும் திட்டப்பணியும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணியுடன் இசைவாக மேற்கொள்ளப்படலாம் என்றும், அவற்றிலும் பங்கெடுக்க சீனா விரும்புவதாகவும் லியூ ச்சின்சுங் தெரிவித்தார். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இந்தத் திட்டப்பணிகளின் நெடுகிலுள்ள நாடுகளுக்கும் இடையேயான மானிடப் பண்பாட்டுப் பரிமாற்றத்தைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்று லியூ ச்சின்சுங் தெரிவித்தார். (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
• வாங் யீ:மத்திய கிழக்கு பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு
• ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்
• சௌதி அரேபியாவின் புதிய பட்டத்துக்குரிய இளவரசருக்கு சீனா வாழ்த்துக்கள்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகருடன் அப்பாஸின் சந்திப்பு
• ஷாங்காயில் நடைபெறும் பிரிக்ஸ் நாட்டு வணிக அமைச்சர்கள் கூட்டம்
• 2017 சீன-இந்தியப் பன்னாட்டு யோக விழா துவக்கம்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகரின் இஸ்ரேல் பயணம்
• காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை – 3 தீவிரவாதிகள் சாவு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040